பொறையார் நகரத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

பொறையார் நகரத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்பொறையார் நகரத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் பொறையார் நகரில் சென்ற ஞாயிற்றுக் கிழமை (26.7.09) இரவு 8:30 மணிக்கு நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சகோரர் Y.A.S. சாதிக் அலி தலைமையில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

அதில் TNTJ மாநில பேச்சாளர் சகோதரர் ஜெய்லானி ஃபிர்தவ்ஸி, சமுதாய பிரச்னைக்கு காரணம் யார்? என்ற தலைப்பிலும், காரைக்கால் மாவட்ட பேச்சாளர் சகோதரர் M.I. முகம்மது சலீம், மரணத்தை சுவைக்கும் மனிதன்! என்ற தலைப்பிலும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் பொறையார் நகர TNTJ நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர். இறுதியாக பொறையார் நகர செயலாளர் சகோதரர் A.M. நூர்தீன் அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்கள். அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.