பொறையாரில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  பொறையார் நகரம் சார்பாக கடந்த 09.01.2011, அன்று இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சின்ன பள்ளி வாசல் அருகில் மாவட்ட துணைத் தலைவர் ஃபாரூக் தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட தலைவர் புஹாரி ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும்  மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஒற்றுமை கோசம் மறுமையில் பயன் அளிக்குமா ? என்றத் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதில் மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் நன்றியுரை நகர பொருளாளர் ஷரீஃப் நிகழ்த்தினார் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர்.