பொதுத் தேர்வு வழிகாட்டி முகாம் – வீராணம்

நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் அருகில் உள்ள வீராணம் கிளையில் கடந்த 26.02.2012 (ஞாயிறு) காலை 10 மணியளவில் 10-ம் வகுப்புஇ 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டி முகாம் முஸ்லிம் உயர் நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.இராமர் அவர்கள் ஆரம்பமாக உரையாற்றினார்கள். பள்ளி தாளாளர் ஆடிட்டர் அசன் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.

பின்னர் அப்துல் கரீம் கல்வியின் அவசியம் மாணவர்களின் ஒழுக்கம் குறித்து உரையாற்றினார்கள்.

பின்னர் உமர் பாரூக் அவர்கள் கல்வியில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.