பொதக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் கடந்த 07-03-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று   பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதரஸா ஆயிஷாவின் (பொதக்குடி)ஆலிமாக்களும், மதரஸா ஆயிஷாவின் பெரிய மாணவிகளும் மிகச்சிறப்பாக தொழுகைப் பயிற்சி, ஜனாஸா விளக்கம், ஹஜ் செய்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இத்தர்பியா முகாமில் சுமார் 463 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.