பொதக்குடியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் மாணவ,மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த  1-5-2010 முதல் 21-5-2010 வரை நடைபெற்றது. அல்லாஹ்வின் பேரருளால் இதில் 97 பெரிய, சிறிய மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 29-05-2010 சனிக்கிழமை மாலை 4:00 மணியளவில் கிளைத்தலைவர் சகோ அக்பர் அவர்களின் தலைமையிலும், கிளை நிர்வாகிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலப் பேச்சாளரும்,மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் “எப்படிப்பட்டக் கல்வி மறுமையில் பயனளிக்கும்”என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.