பைஹ்ரைனில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

P1020092P1020090P1020094கடந்த வாரம் வெள்ளிக் கிழமை (15-1-2010) பகரைன் மண்டல தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் அல்லாஹுவின் கிருபையால் நடைபெற்றது.முஹர்ரக்,ஹித்,ரஃபா, குதைபியா மற்றும் சல்மானியா ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தாயகத்திலிருந்து மாநிலத் தலைவர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதன் பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே மாதம் நடக்க இருக்கும் ஈரம்சக் கோரிக்கை மாநாடு,தஃவா,மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்பட்டது.

முன்னதாக துணைத் தலைவர் சகோ முக்தார் அவர்கள் மசூரா ஒழுங்குகள் பற்றி சிற்றுரை ஆற்றினார்.செயலாளர் ஹாஜா குத்புதீன் அவர்கள் கடந்த ஆண்டு செயல்பாடுகள் வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டியது ஆகிய விசயங்களை பற்றி விளக்கினார்.

பொருளாளர் முபாரக் அவர்கள் பொருளாதார நிலை பற்றி கூறினார்.இறுதியாக தலைவர் முனீப் அவர்கள் ஒவொருவரின் பொறுப்புகளையும் கடமைகளையும் கூறி செயற்குழு அல்லாஹுவின் கிருபையால் இனிதே நிறைவேற்றப்பட்டது.