பைஹ்ரைனில் நடைபெற்ற ஆன்லைன் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

P1000205P1000210P1000207P1000213P1000203P1000209கடந்த வெள்ளிக் கிழமை அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் தமிழ் நாடு தாவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் இணையத் தளத்தின் மூலமாக நேரடி ஒலிபெயர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாயகத்திலிருந்து மார்க்க அறிஞர் பீ ஜெ அவர்கள் மார்க்க மற்றும் இயக்க சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக
பதிலளித்தார்கள்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடை பெற்ற இந்த நிகழ்ச்சி இணைய தளத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் கண்டு பயனடைந்தனர்.பஹ்ரைன் மர்கசில் நடந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு அவர்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

மார்க்சின் ஆண்கள் பகுதி நிரம்பி பக்கத்தில் உள்ள அறைகளிலும் சகோதரர்கள் அமர்ந்ததால் அங்கும் தொலைக் காட்சி இணைப்பு கொடுக்கப்பட்டது.முக்கிய அறையில் 52 இன்ச் தொலைக் காட்சியும் பெண்களுக்கு 42 இன்ச் தொலைக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் தவ்ஹீத் இயக்கங்கள் பிரிந்து கிடப்பது ஏன்?,

மூசா(அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டதர்க்கு மட்டும் ஏன் நோன்பு
பிடிக்கின்றோம் மற்ற நபிமார்களும் காப்பற்றப்பட்டார்களே?

மக்காவில் பித் அத் செய்தவர்களுக்கும் அல்லாஹுவிடைய சாபம்
இறங்குமா?

டிரஸ்ட் சம்பந்தமான TNTJ வின் நிலைப்பாடு போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.

வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியிலிருந்து விடை
பெற்றனர்.அனைவருக்கும் சகோதரர் பீ ஜெ அவர்கள் பேசிய அன்பான அழைப்பு என்ற தலைப்பிலான குறுந் தகடு இலசவமாக கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் இது போன்ற நிகழ்ச்சியை மாதம் ஒரு முறை நடத்துமாறு அன்போடு கேட்டுக் கொண்டனர்.அவர்களின் விருப்பத்தை இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றுவதாக பஹ்ரைன் நிர்வாகிகள் வாக்குறுதி கொடுத்தனர்.

நிகழ்ச்சியை பகரைன் TNTJ நிர்வாகிகள் நல்லமுறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.