பேர்ணாம்பட்டில் பெண்கள் இஜ்திமா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேரணாம்பட் கிளையின் சார்பாக கடந்த 22.10.2010 அன்று முஹம்மதியா பள்ளிவாசலில் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமா என்கிற முஸ்லிம் பெண்களின் சீர்திருத்த நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் செயல் ஆற்றல் கண்காட்சி நடைப்பபெற்றது.

மகளீர் சீர்திருத்த பொறுப்பாளர் அர்ஷியா அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடத்தினார். மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லுரியை சேர்ந்த சகோதரி ஆலிமா ஷாகிரா அவர்களும் சகோதரி ஆலிமா சலீமா அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு வரதட்சனை ஓர் வன் கொடுமை மற்றும் இன்றைய நவீன கலாசாரத்தில் நவீன கலாசாரத்தால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.

சுமார் 1000 க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உள்பட பெரும்திரளாக மக்கள் இதில் கலந்து கொண்டனர்.