பேர்ணாம்பட்டில் நடைபெற்ற வேலூர் மாவட்டச் செயற்குழு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் நேற்று (14.03.2010 ஞாயிற்றுக் கிழமை) மாலை 4.30 மணியளவில் பேரணாம்பட்டில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இச்செயற்குழுவிற்கு வேலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார்கள்.

இச்செயற்குழுவில் இன்ஷா அ ல்லாஹ் ஜீலை 4 ல் நடைபெறவிருக்கும் ‘இந்திய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரும்’ மாநட்டை வெற்றியடையச் செய்ய முழு வீச்சில் பணிகளை மேற்கொள்றுமாறு  ஆம்பூர், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, குடியாத்தம், ஆற்காடு, வாலாஜ, நரியம்பட்டு ஆகிய கிளைகளிடம் வலியுறுத்தப்பட்டது.