பெற்றோரை கொன்றவனுக்கு மரண தண்டனை வழங்கிய உ.பி நீதிபதி!

சொத்து தகராறு காரணமாக தனது வயதான பெற்றோரையும் தனது சகோதரனையு கொன்றவனுக்கு உத்தரபிரதேச நீதிமன்றத்தில் நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25-2-2009 அன்று  5 உதவியாளர்களுடன் புத்சன் என்பவன் தனது பெற்றோரையும் தனது சகோதரனையும் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளான். இந்த வழக்கில் 3 நபர்களை கொன்றதற்காக புத்சன் மற்றம் அவனது உதவியாளர்களுக்கும் மாவட்ட நீதிபதி பானி சிங் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

ஐஏஎன்எஸ் செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டள்ளது.

பணத்தாசை ஒரு மனிதனை எந்த அளவுக்கு கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

நாம் நிச்சயம் மரணிப்போம் நமது மரணத்திற்கு பிறகு நம்மோடு எதுவும் வராது என்பதை ஒவ்வொறு நாளும் மனிதன் நினைத்தால் பணத்தாசை பரந்தோடிவிடும்..

-செய்தி அபு நபீலா