பெரம்பலூரில் ஜனவரி 27 போராட்டம் ஏன் விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக ஜனவரி 27 ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம் பெரம்பலூர் வடக்கு மாதவி ரோட்டில் கடந்த 25-12-2010 அன்று நடைபெற்றது.

இதில் மாநிலத்தலைவர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தஹ்பி அவர்கள் பாபர் மஸ்ஜிதின் அலஹாபாத் உயர் நீதிமன்ற அநியாயத் தீர்ப்பினை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் சகோ. முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இப்பொதுக்கூட்டத்தை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். ஆண்கள் பெண்கள் ஏன திரளாக கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!