பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக சிறப்பு துணைத் தேர்வு!

பிளஸ் டூ தேர்வில் தோல்வியைச் சந்தித்துள்ள மாணவர்கள் இந்த வருடமே கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் உடனடி சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் 23ம் தேதி முதல் வழங்கப்படும்.

அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185, 4 பாடங்களுக்கு ரூ.235, 5 பாடங்களுக்கு ரூ.285, 6 பாடங்களுக்கு ரூ.335 கட்டணமாகும்.

2012 மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான பள்ளிக்கூட மாணவர்கள் எஸ்.எச். என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர்கள் படித்த பள்ளியில் பெற்று பூர்த்தி செய்து 28ம் தேதிக்குள் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

2012-ம் ஆண்டு தனித் தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் 23 முதல் 28ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்று அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேடித் தந்தவர் – எஸ். சித்தீக் எம்.டெக்