பெண்கள் பயான் நிகழச்சியில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சுன்னத் ஜமாஅத் கும்பல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கலமருதூரில் கடந்த 2-4-2010 அன்று மாலை பெண்கள் பயான் நிகழச்சி நடைபெற்றது. இதில் வரட்சனை ஒழிப்பு பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து கொண்ட சுமார் 30 பேர் கொண்ட சுன்னத் ஜமாஅத் கும்பல் திடிரென பெண்கள் அமர்ந்திருந்த மர்கசில் நுழைந்து அங்கிருந்த நமது நிர்வாகிகளையும் பெண்களையும் தகாதவார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

மேலும் அங்கிருந்து கார் கண்ணாடியை உடைத்து மர்கசை சேதப்படுத்தினர். உடனே மாவட்ட தலைவர் ஷாகுல் அவர்களின் தலைமையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி திருனவலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.