பெங்களூர் TNTJ சார்பாக ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி

dsc00882கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்(KTJ) பெங்களூர் மாவட்டம் சார்பாக Rs 60000 மதிப்புள்ள ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்வுடன் கொண்டாடும் வண்ணம் அணைத்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் அணைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் சசுமார் 600 குடும்பங்கள் பயன் பெற்றனர். ஃபித்ரா விநியூகம் காலை 10 மணிக்கு துவங்கி நண்பகல் வரை நீடித்தது. இதன் காரணமாக KG ஹல்லியில் அமைந்துள்ள தாவா சென்டர் மக்கள் வெள்ளத்தால் ரோம்பியது. மேலும் அணைத்து தமிழ் பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்து இருந்தனர். இந்த செய்தி அநேக பத்திரிக்கைகளில் மறுநாள் வெளிவந்தது குறிப்பிடதக்கது.

இந்த ஃபித்ரா விநியோகம் KG ஹள்ளி பகுதி மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இதே போல் மைசூரில் சும்மார் Rs:4500 மதிப்புள்ள பொருட்களும், டும்கூர் சார்பாக Rs: 5600 மதிப்புள்ள பொருட்களும் வழங்கப்பட்டது