பெங்களூர் KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் கடந்த  21.05.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்: அப்துல் ரஹீம் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் சமுதாயப் பணி” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இதனை தொடர்ந்து ஜூலை 4 மாநாட்டின் அவசியத்தை பற்றியும் ஒவ்வொருவரும் மேற்கொள்ளவேண்டிய பணிகளை பற்றியும் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர் – அல்ஹம்துலில்லாஹ்!