பெங்களூரில் முஹர்ரம் மாதத்தின் மூடப்பழக்கங்களை எதிர்த்து மார்க்க விளக்கக் நிகழ்ச்சி

DSCN2124DSCN2123 (1)கர்நாடக மாநிலம் பெங்களூரில் முஹர்ரம் மாத பித்அத்கள் மிக அதிக அளவில் காணப்படும். குறிப்பாக KG ஹள்ளி பகுதியில் ஷியாக்களின் கோயில்கள்(பஞ்சா) அனைத்திலும் சிறப்பு அர்ச்சனைகளும் தெருவெங்கும் கூத்து- கச்சேரிகளும் அரங்கேறிவருகிறது. முஹர்ரம் பிறை 1 அன்று துவங்கும் இந்த அனாச்சாரங்கள் முஹர்ரம் 10ம் நாள் வரை களைகட்டும். ஷியா களின் அடிச்சுவடுகளை பின்பற்றும் “சுன்னத் வல் ஜமாத்தினர்களும்” முழு ஆர்வத்துடன் இந்த தீமைகளில் பங்கேற்பார்கள்.

இந்த தீமைகளை சுட்டிக்காட்டும் விதமாக KTJ தாவா மையத்தில் கடந்த 20-12-2009 அன்று சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் TNTJ மாநில பேச்சாளர் மௌலவி: தாஹா MISc அவர்கள் “முஹர்ரம் மாதத்தில் பெயரால்…” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தமது உரையில் முஹர்ரம் மாததுக்கென்று எனென்ன சிறப்பு அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லி காட்டுகிறார் என்று ஹதீஸின் ஒளியில் எடுத்துரைத்தார்.

மேலும் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆகிய தேதிகளில் நோன்பு நோற்பது தொடர்பான செய்திகளையும், இந்த நோன்பின் சிறப்பை பற்றியும் அழகாக எடுத்துரைத்தார்.

அதே போல் முஹர்ரம் மாதத்தின் பெயரால் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிறபகுதிகளில் எனென்ன அனாச்சாரங்களை இந்த சமுதாயம் அரங்கேற்றுகிறது என்பதையும், இந்த காரியங்கள் எவ்வளவு மூடத்தனமானது என்பதும், மார்கத்துக்கு எதிரானது என்பதையும் பட்டியல் இட்டார்.

இதனை தொடர்ந்து மக்களுக்கு கேள்வி கேட்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்- அல்ஹம்துலில்லாஹ்!