பெங்களூரில் நடைபெற்ற TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம்

பெங்களூரில் நடைபெற்ற TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம்

dsc01126பெங்களூரில் கடந்த ஞாயிற்று கிழைமை (12/07/09) மாலை 4 மணிக்கு TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநில தலைமையகத்தில் நடைபெற்றது இதில் மாநில மாணவரணி செயளாளர் S.சித்தீக்.M.Tech தலைமை தாங்கினார், கர்நாடகா மாநில தலைவர் M.அஹமத் கான் , மாநில செயளாளர் A.முஹம்மது கனி,கர்நாடகா மாநில மாணவரணி செயளாளர் A.சைபுதீன்.M.Sc., கிருஷ்னகிரி மாவட்ட மாணவரணி செயளாளர் இம்ரான், மண்டல மாணவரனி துனை செயளாளர் நாஸீர் அஹமத் பெங்களூர் மாவட்ட தலைவர் K.A.சித்தீக், செயளாளர் K.S.சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் இறுதியில் A.ஹைதை அலி பெங்களூர் மாவட்ட மாணவரணி செயளாளராக நியமிக்கபட்டார், மேலும் கீழ்கானும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.கர்நாடகாவில் வாழும் முஸ்லீம் மாணவ மாணவியர்களின் கல்வி வளர்சி மேம்படுத்துவது, இதற்க்காக கர்நாடகா மாநிலத்தின் கல்வி பற்றிய முழுதகவல்களையும் ( நுழைவு தேர்வுகள், அரசாங்க பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை கழகங்கள், இட ஒதுக்கீடு பற்றிய தகவல், முஸ்லீம் மாணவ , மாணவியரின் எண்ணிக்கைகள், கல்வி உதவி செய்யும் நிறுவனங்களை பற்றிய தகவல்கள்) திரட்ட சகோ. சைபுதீன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

2. மாணவரனியின் சேவைகளை கர்நாடகா மாநிலம் முழுவதும் விரிவு படுத்துவது,

3. பெங்களூரில் 6 இடங்களில் மாணவரனி நிகழ்ச்சிகள் நடத்துவது,

4. சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணாவரனி சார்பாக கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்துவது.

5. மாணவரனியின் ஆலோசனை கூட்டத்தை மைசூர், சிமோகா, கோலாரில் நடத்துவது.