பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள KTJ தாவா மையத்தில் கடந்த 02.04.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி: வலியுல்லாஹ் MISc அவர்கள் “நரக நெருப்பில் இருந்து மீளுவது எப்படி?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கர்நாடக பகுதி TNTJ செயலாளர் சகோதரர்: முஹம்மத் கனி “அழைப்பாலர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.