பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள KTJ தாவா மையத்தில் வாரந்தோறும் TNTJ மார்க்க அறிஞர்கள் கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்ற 26.02.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக பகுதி TNTJ செயலாளர் சகோதரர் முஹம்மத் கனி “சஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து TNTJ  மௌலவி:ஜீலானி ஃபிர்தௌசி அவர்கள் “ஈமான் – நபிமார்களை நம்புவது” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.