பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி

dsc002542கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெங்களூரில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 25.10.2009 அன்று பெங்களுரில் உள்ள கர்நாடக தவ்ஹீத் ஜமாத் தஃவா சென்டரில் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் KTJ வின் பொருளாளர் சகோதரர் முஹம்மது சலீம் “கொள்கையில் சமரசம் இல்லை ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தமது உரையில் மாக்க விஷயங்களில் ஒரு போதும் சமரசம் செய்யகூடாது என்பதையும் மீறி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் குர்ஆண்- ஹதீஸ் ஒளியில் அழகாக எடுத்துரைத்தார்.இதில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர் பயன்பெற்றனர்.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் ரியாத் மண்டலம் சார்பாக ரியாதில் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் முஹம்மத் யின் மனைவி மருத்துவ செலவுக்கு RS:20000 வழங்கப்பட்டது. இதே சகோதரருக்கு 6 மாதத்துக்கு முன் Rs15000வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.