பெங்களூரில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி!

ktj_2கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரில் தமிழ் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் K.G. ஹல்லியில் கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக வாரந்திர பயான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் TNTJ வின் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார்கள். இதில் ktjஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 06.07.2009 அன்று பெங்களுரில் உள்ள தஃவா சென்டரில் மௌலவி தமீம் அவர்கள் கலந்து கொண்டு ”நாவடக்கம்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தனது உரையில் நாவினால் எற்பட கூடிய தீங்குகளையும், அதனால் எற்பட கூடிய நன்மைகளையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.