பெங்களூரில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

கர்நாடகப் பகுதி TNTJ பெங்களுரு மாவட்டத்தின் சார்பாக பல்வேறு தாஃவா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 12.03.2010 அன்று KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு கர்நாடக பகுதி TNTJ பெங்களுரு மாவட்ட தலைவர் சகோதரர்:சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் TNTJ மாநில தலைவர் மௌலவி: பகீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் “இம்மை ஒற்றுமையும், மறுமை வெற்றியும்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

வெறும் 2 நாட்களுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்டுள்ள பெண்கள் உட்பட சுமார் 450 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்!