பெங்களூரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

பெங்களூரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் (TNTJ) வின் அங்கமாக செயல்பட்டு வரும் கர்நாடக தவ்ஹீத் ஜமாத் (KTJ) கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடர்ந்து வார வாரம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 09.08.2009 அன்று பெங்களுரில் உள்ள கர்நாடக தவ்ஹீத் ஜமாத் தஃவா சென்டரில் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் TNTJ வின் மாநில பேச்சாளர் சகோதரர் அஹமது கபீர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் அஹமது கபீர் அவர்கள் “முஃமின்களின் பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்புகளையும், முஃமின்களிடம் இருக்க கூடாதே பண்புகளையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தார்கள்.

இதில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர் பயன்பெற்றனர்.