பெங்களுரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

dsc01135

dsc01137

dsc01139கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரில் தமிழ் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் K.G. ஹல்லியில் கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் TNTJ வின் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 12.07.2009 அன்று பெங்களுரில் உள்ள தஃவா சென்டரில் மௌலவி அப்துல் கரீம் அவர்கள் கலந்து கொண்டு ”பாவங்களும் தண்டனைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மௌலவி அப்துல் கரீம் அவர்கள், தனது உரையில் சிறிய மற்றும் பெரிய பாவங்களையும், அந்த பாவங்களுக்கான தண்டனைகளையும் சிறப்பாக விளக்கினார்கள். மேலும், சிறிய மற்றும் பெரிய பாவங்களிலிருந்து தவ்ஹீத்வாதிகள் எவ்வாறு தவிர்ந்து இருக்க வேண்டும் என்பதையும் மௌலிவி அப்துல் கரீம் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வார வாரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!