புளியந்தோப்பு கிளையில் தெருமுனைக் கூட்டம் – சுன்னத் ஜமாஅத் முயற்சி தோல்வி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 12-2-11 அன்று மன்னார்சாமி   தெருவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுன்னத் ஜமாஅத்தினர் கூட்டத்தை நடக்கவிடாமல் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இறைவனது கிருபையால் காவல்துறையின் பாதுகாப்புடன் கூட்டம் இனிதே நடைபெற்றது குறிப்பிடதக்கது.