புர்கா அணிந்ததற்காக நீதிமன்ற வலாகத்திலேயே குழந்தையின் கண்முன்னே குத்திகொல்லப்பட்ட முஸ்லிம் பெண்: ஜெர்மனியில் நடந்தேரிய கோடூர சம்பவம்!

மர்வா மற்றும் குடும்பத்தினர்
மர்வா மற்றும் குடும்பத்தினர்

நீதிமன்ற வலாகத்திலேயே எகிப்து நாட்டை சேர்ந்த மார்வா என்ற முஸ்லிம் கர்பிணி பெண், இனவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப் பட்ட சம்பவம் இந்த மாதம் ஜெர்மனி டிரெஸ்டென் நகரத்தில் நடந்தேரியுள்ளது.

16 கத்திக்குத்துகளை வாங்கி கோர்ட் வலாகத்திலேயே மரணமடைந்தார் மார்வா முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார் 4 மாத கர்ப்பிணியான மார்வா புர்கா அணிந்திருந்ததை பார்த்து “பயங்கரவாதி” என கூறியுள்ளான் அலெக்ஸ் என்ற ஜெர்மனிக்காரன்.

மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார்.

நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தனது மனைவியைப் பாதுகாக்க முயன்ற கணவனை, காவலில் நின்ற போலீஸ்காரர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். தாக்குபவர் யார் என்று தெரியாமல் தடுமாற்றத்தில் சுட்டு விட்டதாக, போலீஸ் பின்னர் விளக்கமளித்தது.

இந்த சம்பவம் குறித்து ஜெர்மன் பத்திரிகையில் வந்த செய்தி.

இதுவரை காலமும் ஒரு மூன்றாம் உலக நாட்டில் மட்டுமே, இது போன்ற நீதிமன்றக் கொலைகள் நடக்க வாய்ப்புண்டு, என்று பலர் நினைத்திருக்கலாம். பட்டப்பகலில், பலர் பார்த்திருக்கையில், அதுவும் நீதிமன்றத்தினுள் எப்படி இந்தக் கொலை நடக்கலாம்? என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “நாகரீகமடைந்த மக்கள் வாழும்” ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், இஸ்லாமியர் மீதான வெறுப்பின் விளைவாக நடந்த இந்தக் கொலை, ஜெர்மனியில் புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது.

மற்ற படி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இஸ்லாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால்? அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும். “அல் கைதாவின் பயங்கரவாதத் தாக்குதல்” என்று சர்வதேச ஊடகங்களிலும் ஒரு சுற்று வந்திருக்கும்.

மேற்குலகில் இனவாதம் எப்படி மேலோங்கி என்பதற்கு, மேற்குறிப்பிட்ட செய்தி வழங்கல் நெறிமுறை ஒரு உதாரணம். ஜெர்மனியில் இனவெறிக்கு பலியான எகிப்தியப் பெண் மார்வாவின் மரணச் சடங்கு, அவரது சொந்த ஊரான அலெக்சாண்ட்ரியா நகரில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். எகிப்தியப் பத்திரிகைகள் “ஹிஜாப்பிற்காக தியாக மரணத்தை தழுவிக்கொண்டவர்.” என்று புகழாரம் சூட்டின.

பல அரசியல் தலைவர்களும் மார்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர். ஐரோப்பாவில் AEL மட்டும் கண்டன அறிக்கையை வெளிவிட்டது. அந்த அமைப்பின் தலைவர் அபு ஜாஜா “ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களையும், அவர்களது மதத்தையும் கிரிமினல் மயப்படுத்தியதன் விளைவு இது.” என்று தெரிவித்துள்ளார்.