புருனேயில் இயங்கி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் கடந்த 13-12-2009 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபை கொண்டு இரண்டாவது ஆண்டு ரத்த தான முகாமை சிறப்பாக நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் S பஹுர்தீன் தலைமை தாங்கினார்.
போன வருடம் மோராவில் (MUARA) நடத்தப்பட்டதால், இந்த வருடம் செருசோப்பில் (SERUSOP) ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் நூறு யூனிட் ரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் வந்திருந்தார்கள்.
காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மதியம் இரண்டேகால் வரையில் இரத்த தான முகாம் நடைபெற்றது, வார விடுமுறையான ஞாயிற்றுகிழமை என்றும் பாராமல் பலர் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு ஜமாஅத் சார்பில் உணவு கொடுக்கப்பட்டது. புருணை அரசின் மருத்துவ இலாகா சார்பில் குளிர்பானம், பிஸ்கட் மற்றும் உயர்தர பிளாஸ்டிக் பாட்டில் (PET BOTTLE) ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது.