புத்தாநத்தம் பொதுக் கூட்டத்தில் மத்ஹபுவாதிகள் கொலைவெறித் தாக்குதல் (புகைப்படங்கள்)

திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் கடந்த 15-5-2010 அன்று நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக் கூட்டத்தில் மத்ஹபு ஜமாஅத்தைச் சேர்ந்த ரௌடிகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மற்றும் கொள்கை சகோதரர்கள் தாக்குதலுக்குள்ளாயினர்.

மிகக் குறைவாகவே இருந்த காவல்துறையினரால் நிலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனடியாக காவல்துறை வேனில் வந்து இறங்கியவுடன் கொலை வெறிதாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் நமது சகோதரர்கள் பலரும் காவல்துறையைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.