புதுவலசையில் நடைபெற்ற மாணவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளை மர்கஸில் நேற்று (17-4-2010) நடைபெற்ற மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சியில் மாணவர்களும் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சகோ. ரஹ்மான் அலி தவ்ஹிதி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை பற்றிய வகுப்பும் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் அல்லாஹ்வை நம்புவது பற்றியும் அவனுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொறு முஸ்லிமுக்கும் கடமை என்பது பற்றியும் வகுப்பு நடத்தினார்கள்.