புதுவலசையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில்  நேற்று (21-3-2010) தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 6.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை பற்றியும் ஏகத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து சகோ. அர்சத் அலி அவர்கள் மௌலீதுகள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சுபஹான மௌலீது, யா குத்பா, மற்றும் முஹையதீன் மௌலீதுகளின் மூலப்பிறதிகளை வைத்து அது எந்த அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.