புதுக்கோட்டை அம்மாப்பட்டினம் கிளையில் அவசர இரத்த தான உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 30/04/2010 அன்று சம்பைப்படினம் ஜகுபர் நிஷா என்ற பெண்மணிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் 0+ இரத்தம் 2 யூனிட் வழங்கப்பட்டது

அக்குடும்பத்தினர் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றா நிலையில் இருந்தனர். பிறகு அவர் குடும்பத்தினருக்கு ஷிர்கை பற்றியும் பித்அத் பற்றியும் கிளை நிர்வாகி குத்துஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

மேலும்  01/05/2010 அன்று ஈச்சங்குடியை சேர்ந்த சந்திரா என்ற பெண்மணிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் 0+ இரத்தம் 3 யூனிட் வழங்கப்பட்டது.

பிறகு இவருடைய கணவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி சில நூல்கள் கொடுக்கப்பட்டது.

மேலும் கடந்த 01/05/2010 அன்று உசிலங்காடு-செல்வி என்ற பெண்மணிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் 0+ இரத்தம் 1 யூனிட் வழங்கப்பட்டது.

இவருக்கும் தாவா பணி செய்யப்பட்டது.