அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளையில் 170-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்ட மாபெரும் மெகா இரத்தான முகாம்

blood3blood5blood8blood9இரத்தான செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வளைகுடா பகுதிகளிளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இரத்தான முகாம்கள் மற்றும் மக்களின் அவசர  தேவைகளுக்காவும் இரத்ததை தானமாக வழங்கி உயிர்காத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலத்தில் உள்ள மிக பெரிய மருத்துவமனையான ‘ஷேக் கலிஃபா மெடிக்கல் சிட்டி’ மருத்துவமனையிலுள்ள இரத்தான பிரிவு அதிகாரிகள் அபுதாபி TNTJ நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடியாக உதிரம் தேவை உங்கள் உறவுகளிடம் ஏற்ப்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்தனர்,

நாம் ஏறக்கனவே 28,29 தேதிகளில் இரத்தான முகாம் நடத்துவதாக திட்டமிட்டருந்தாலும் இதன் அவசரத்தை புரிந்து கொண்டு அதிகாரிகள் வைத்த  கோரிக்கையை ஏற்று அபுதாபி TNTJ நிர்வாகிகள் உடனே ஐகாட் சிட்டி கிளை நிர்வாகிகளிடம்   தெலைபேசியில் தொடர்பு கொண்டு 14,15 தேதிகளில் அவசர இரத்தான முகாமை ஏற்பாடு செய்தனர்.

எந்த முன்னேற்ப்பாடும் செய்யாமல் இந்த முகாம் அவசரமாக ஏற்பாடு செய்ததால் அதன் அவசியத்தையும் அவசரத்தையும் மக்களிடம் நிர்வாகிகள் விரிவாக விளக்கினார்கள்  ‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்ற திருமறை வசனத்தை நினைவுபடுத்தி 82-க்கும் மேற்பட்ட சகோதராhகள் உதிரத்தை கொடையாய் அளித்து உண்மையை நிலை நாட்டினார்கள், இறைவனுக்கே எல்லா புகழும்!

அதுமட்டும் இல்லாமல் நிர்வாகிகள் சற்றும் சளைக்கமால் ஏற்கனவே திட்டமிட்டபடி 28,29 தேதிகளில் இரத்தான முகாமை ஏற்பாடு செய்தனர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை ஏற்பாடு செய்த இந்த முகாமுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர், பாகிஸ்த்தான், பங்களதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பாதாக அமைந்தது, முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது.இதில் 90 க்கும் மேற்பட்ட சகோதரார்கள் இரத்தத்தை தானமாக கொடுத்தனர், நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆச்சரியத்துடன் பார்த்த அதிகாரிகள் TNTJ வின் சமுதாய பயணம் மென்மேலும் சிறப்பாக அமைவதற்க்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வாதாக கூறினர் நிர்வாகிகளிடம் நன்றியையும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியுடன் விடைபெற்று கொண்டனர். இந்த முகாமுக்கு அபுதாபி மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், முகாம் ஏற்பாட்டை ஐகாட் கிளை தலைவர் தென்காசி ஷரிஃப் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இச்சகோதரர்கள் நிர்வாகத்திற்க்கு புதிதாகயிருந்தாலும் அனுபவம் உள்ள சகோதரர்களை விட மிக சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே