பிற அமைப்புகளுடன் இணைவது?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையுடன் அதில் எள் முனை அளவுக்கும் வளைந்து கொடுக்காம்ல் செயல்படும் இயக்கம் என்பதையும், இந்தத் தனித்தன்மை காரணமாகவே நமது ஜமாஅத் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக உள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் பொதுவான உள்ளூர் பிரச்சனைகளில் மற்றவர்களூடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டு அவ்வாறு செயல்பட்ட போது நமக்கு பின்னடைவு ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நாம் உண்ர்கிறோம்.

கொள்கையில் சமரசம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மற்றவர்கள் மார்க்க வரம்பையும் நாட்டின் சட்ட வரம்பையும் மீறும் போது அதை நாம் சுமக்கும் நிலமை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டு.

இதைக் கவணத்தில் கொண்டு இனி எதிர் காலத்தில் பிற இயக்கங்களுடன் சங்கங்களுடன் இணைந்து எந்தவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், தனித்தே அமைத்துக் கொள்ளுமாறும் மாவட்ட, கிளை நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.