பி.ஜே.பி யின் பாசிச கொடூரம்: மத்திய பிரதேசத்தில் நீதி என்ன ஆனது?

professor-sabharwalகடந்த 2006ம் ஆண்டு உஜ்ஜைனியில் உள்ள மாதவ் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கானோரின் கண் முன்பாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட பேராசிரியர் சபர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரையும் நிரபராதிகள் எனக் கூறி விடுவித்து விட்டது நாக்பூர் கோர்ட்.

அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்தார் சபர்வால். கல்லூரி மாணவர் சங்க தேர்தலை தள்ளிப் போடுவது குறித்து அவர் ஏபிவிபி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் சபர்வாலை கத்தியால் குத்திக் கொன்றனர்.

இந்த வழக்கை முதலில் உஜ்ஜைன் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் கொலையாளிகள் பாஜகவின் ஒரு அங்கத்தினர் என்பதால், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலிருந்து வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார் சபர்வாலின் மகன் ஹிமன்சு.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் வழக்கு நாக்பூர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், போதிய ஆதாரம் இல்லாததால் 6 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

சிந்தனையுள்ள மனிதனை உருவாக்கும் இது போன்ற ஆசிரியர்களை கோடூரமாக கொண்டது பாஜாக வின் அங்கமான மாணவர் அமைப்புதான் என்பதை மீடியாக்களில் வெளியிடப்பட்ட விடியோ காட்சிகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலம் என்பதால் நீதி துறையின் கண்னையே மூட வைத்து இந்த பாஜக அமைப்பு அராஜகத்தின் உச்சகட்டடித்திற்கு சென்றுவிட்டது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று இருக்கின்றது என்பதை பின் வரும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விடியோ தெளிவாக உணர்த்துக்கின்றது:

bjp