பி.ஜே.பி எம்.எல்.ஏ க்கள் அத்வானி வீட்டை முற்றுகை

பி.ஜே.பி எம்.எல்.ஏ க்கள் அத்வானி வீட்டை முற்றுகைபி.ஜே.பி எம்.எல்.ஏ க்கள் அத்வானி வீட்டை முற்றுகைBJP கட்சியின் சார்பாக நாடாறுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருப்பவர் அத்வானி. இவரது வீட்டை இவரது கட்சி எம்.எல்.ஏ க்களே நேற்று (14-8-2009) முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த பரிதாப நிலை வேறு எந்த கட்சிக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை!

பொதுவாக ஒரு கட்சி எம்.எல்.ஏ க்கள் தங்களது எதிர்கட்சி கட்சி தலைவர் விட்டை தான் முற்றுகையிடுவார்;கள்.

ராஜஸ்தான் மாநில பி.ஜே.பி கட்சியின் தலைவர் வசுந்தரா ராஜே. இவர் தற்போது ராஜஸ்தான் மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உள்ளார். இவரை இந்த பதிவியிலிருந்து விலகுமாறு பி.ஜே.பி கட்சியின் தலைமையி, ஆர்.எஸ்.எஸ் உடன் சேர்ந்து கொண்டு கட்டளையிட்டுள்ளது.

இதை பரிசீலனை செய்யக் கோருவதற்கு கடந்த 14-8-2009 அன்று பி.ஜே.பி கட்சியை சேர்ந்த 55 எம்.எல்.ஏ க்கள் அத்வானியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றனர்.

அத்வானி தனது கட்சி எம்.எல்.ஏ க்களை சந்திக்க மறுத்து விட்டார். இதை தொடர்ந்து கோபமடைந்த 55 எம்.எல்.ஏ க்களும் அத்வானியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

மேலும் பி.ஜே.பி கட்சி அவரை (வசுந்தரா ராஜே) ராஜஸ்தான் மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பதியிலிருந்து நீக்கினாலும் ராஜஸ்தான் மாநில பி.ஜே.பி எம்.எல்.ஏ க்களான நாங்கள் அவரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுப்போம் என தெரிவித்துள்ளனர்.

பி.ஜே.பி கட்சியின் சார்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருப்பவர் அத்வானி. அவரது வீட்டை அவரது கட்சி எம்.எம்.ஏ க்களே முற்றுகையிட்டுள்ளது பி.ஜே.பி கட்சி எந்த அளவிற்கு சீரழிந்து சின்னாபின்னமாகி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கும் நிதர்சன சான்றாக உள்ளது.

-அபு நபீலா