பாஸ்போர்ட் சிக்கலில் மாட்டிய மூதாட்டி – கலமிறங்கிய குவைத் TNTJ

சுமார் ஒன்னேகால் வருடத்திற்கு முன்பு ஒரு கால் ஒரு கை செயல் இழந்த நிலையில் சிகிச்சைக்காக ஒரு மூதாட்டி குவைத் சபா மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.

அவசரத்தில் வந்த அவரை அனுமதித்த மருத்துவ மனை நிர்வாகம். பின்னர் அவருடைய குடியுரிமையை சோதித்து பார்க்கையில் அவருடைய குடியுரிமை காலாவதியாகி. ஆறு மாதம் கழிந்திருந்தது தெரியவந்தது. இதில் அவரை நாட்டுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்ப்பட்டது.

செய்தியறிந்த குவைத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத். நேரில் சென்று அந்த மூதாட்டியிடம் பேசியதில். பெயர் ஜகான்மா தா/பெ-அப்துல் மாலிக் வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு, ஹாஜி தெருவை சேர்ந்தவர் என்றும், குவைத்தில் தான் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பனி புரிந்து வருவதாகவும். தெரிவித்தார்.

மேலும் தான் ஒரு குவைத்தியிடம் தனது குடியுரிமைக்காக நானூறு தினார் கொடுத்திருக்கிறார்.

அந்த மூதாட்டியிடம் தகவலை பெற்றுக் கொண்டு குடியுரிமை அலுவலகம் சென்று விசாரித்து பார்த்ததில் அவருடைய குடியுரிமை ரத்து செய்யப்பட்டிருந்ததும், இந்த மூதாட்டியின் மீது அவருடைய ஸ்பான்சர் வழக்கு தொடர்ந்திருப்பதும் தெரிய வந்தது.

மூதாட்டியிடம் பாஸ்போர்ட்டும் கையில் இல்லாததால் வழக்கு இழுத்துக் கொண்டே போனது. இவரை நாட்டிற்கு அனுப்புவதும் கடினமாக இருந்தது.இந்திய தூதரகமும் இந்த விசயத்தில் தலையிட்டிருந்தது.வழக்கம் போல் தூதரகம் ஆமை வேகத்திலேயே செயல்பட்டது.ஆனாலும் நம் ஜமாத்தினர் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்த ஒன்னேகால் வருட காலத்தில் அந்த மூதாட்டியை சோர்வடைய விடாமல் நம் ஜமாஅத் சகோதரர்கள் தினமும் குடும்பமாக சென்று பார்த்து ஆறுதல் சொல்லி வந்தனர்.

அல்லாஹ்வுடைய பேருதவியால் கடந்த 16-12-2010 வியாழன் கிழமை அந்த அம்மாவின் வழக்கு முடிவுக்கு வந்து குவைத் அரசு இவரை தன் தாய்நாட்டிற்கு செல்ல அனுமதி தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த 19-12-2010 ஞாயிற்றுக் கிழமை அந்த மூதாட்டியை நமது ஜமாத்தினர் தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.செய்தி கேள்விப் பட்ட அந்த மூதாட்டியின் உறவினர் தொலை பேசியில் நம்மை தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!