பாலத்தை சரி செய்ய திருவிதம்கோடு TNTJ வினர் எம்எல்ஏ விடம் மனு

திருவிதாங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் , தேங்கைபட்டணம் பகுதிகளுக்கு செல்வதர்க்கு அமராவதி பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்திவ்ந்தனர்.

இந்த பாலம் சில மாதங்களுக்கு முன்பு வந்த மழையால் உடைந்தது. பல நாட்கள் ஆன பிறகும் பாலம் சரி செய்யபடவில்லை.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். இந்த சூழலில் மழையால் பழுதான திருவிதாங்கோடு பகுதியில் உள்ள அமராவதி பாலத்தை விரைந்து சீரமைக்க வலியுருத்தி எம்.எல்.ஏ.விடம் தவ்ஹீத் ஜமாத் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் பலமுறை போராடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் தூங்கிக்கொண்டு இருக்கும் பாலம் மனித உயிர்களுக்கு உலை வைக்கும் பாலமாக இருந்து வருவதை போக்க உடனடியாக அரசு எடுத்துள்ள நடவடிகையை என்ன? இதன் கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்பதை கேட்டு அதற்கு உடனடி தீர்வு காண திருவிதம்கோடு TNTJ கிளை நிர்வாகிகள் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் (M.L.A) ரஜிநாலட்  அவர்களை
19-02-11 நேரில் சந்தித்து விளக்கம் கேட்டனர்.

இந்த பண்ணிகளுக்குரிய சமந்தப்பட்ட துறை யினரை தொடர்புகொண்டுவிட்டு பணிகள் இன்னும் ஒருவாரத்தில் கண்டிப்பாக துவங்கும் என்றும் டெண்டர் விடப்பட்டு அனுமதியும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் கூறி நிச்சயம் இதனை உடனடியாக முடிப்போம் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார் .