பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக காவல்துறைத் தலைவர் லத்திகா சரணை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்: ”தீய சக்திகள் மீது தகுந்த நடவடிக்கை” காவல்துறை தலைவர் உறுதி!

எதிர் வரும் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு  தொடர்பாகவே கடந்த 21.09.2010 அன்று டிஎன்டிஜே பொதுச் செயலாளர் எம்.அப்துல் ஹமீது, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கலீல் ரசூல், மாநில மேலான்மைக்குழுத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, மேலான்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஆகியோர் அடங்கிக குழுவினர் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

அதற்குக் காவல் துறைத் தலைவர் டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமாறு கேட்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

பள்ளிவாசல்களில் இதுபற்றிய அறிவிப்பு செய்யும்படியும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பலத்த ஏற்பாடுகள் போடப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கு முயலும் தீயசக்திகள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும் காவல்துறைத் தலைவர் அளித்திருக்கிறார்.

இவ்விஷயத்தில் காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவதாக டிஎன்டிஜே நிர்வாகிகள் தெரிவித்தனர்.