பாபர் மஸ்ஜித் ஆவணம் காணாமல் போன விவகாரம்: கண்டன ஆர்ப்பாட்ட கோஷங்கள்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும்இ உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும்இ ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்படும் கோஷங்கள்:

அல்லாஹூஅக்பர், அல்லா ஹூஅக்பர்,
அல்லாஹூஅக்பர், அல்லா ஹூஅக்பர்,

போராட்டம் இது போராட்டம்
டிஎன்டிஜே போராட்டம்
பாபர் மஸ்ஜித் ஆவனத்தை
கண்டுப்பிடிக்க வலியுறுத்தி
டிஎன்டிஜே நடத்தும்
தீவிரமான போராட்டம்

கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்,
ஆவனங்களை களவாடிய
அயோக்கியர்களை கண்டிக்கிறோம்,
ஆவனத்தை அழிக்கத்துடிக்கும்
அயோக்கிய தனத்தை கண்டிக்கிறோம்,

பாபர் மசூதியை இடித்துவிட்டு
ஆவனத்தையும் திருடிவிட்டு
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
முஸ்லிம்களை வஞ்சிக்காதே!

நல்லதல்ல! நல்லதல்ல!
இழி பிறவிகளே நல்லதல்ல!
இந்தியாவின் இறையான்மைக்கு
வேட்டு வைக்கும் இந்த செயல்
இழிபிறவிகளுக்கு நல்லதல்ல!

ஓயமாட்டோம் ! ஓயமாட்டோம் !
பாபர் மஸ்ஜித் நிலத்தை
மீட்கும் வரை ஓயமாட்டோம் !

கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்,
கட்டித்தருவோம் என்று சொல்லி
காலம் காலமாய் ஏமாற்றும்
காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம்,

களையவேண்டும், களையவேண்டும்,
களவாடிய கும்பல்களோடு
கள்ள உறவு வைக்கின்ற
கையாளாகாத காங்கிரஸ் அரசின்
கயமத்தனங்கள் களையவேண்டும்,

நீதி வேண்டும், நீதி வேண்டும்,
காலம் காலமாய் ஓட்டு பெற்று
கடைசி நேரத்தில் கழுத்தறுக்கும்
காங்கிரஸ் அரசே  நீதி வேண்டும்,

ஓயமாட்டோம் ! உறங்கமாட்டோம் !
கொள்ளை போன ஆவனங்களை
கொண்டு வந்து சேர்க்கும் வரை
ஓயமாட்டோம் ! உறங்கமாட்டோம் !

கட்டித்தரத்தான் மனமில்லை !
காப்பாற்றவுமா அறிவில்லை ??
ஆண்டுகள் பல கடந்தாலும்
முஸ்லிம்களுக்கு நீதியில்லை

நெஞ்சில் குத்தும் பாஜகவே
முதுகில் குத்தும் காங்கிரஸே
கூட்டுச் சதிதான் செய்கின்றாயா ??
வேட்டு வைக்கத் துடிக்கின்றாயா ??

நிறுத்திடு , நிறுத்திடு ,
அத்துமீறலை நிறுத்திடு ,
சதிகாரக் கும்பல் வென்றதாக
சரித்திரத்தைப் பதிய நினைக்கும்
சங்பரிவார சாத்தானே
அத்துமீறலை நிறுத்திடு ,

எச்சரிக்கை ! எச்சரிக்கை !
எட்டப்பர்களே எச்சரிக்கை !
பச்சை துரோகத்திற்கு எச்சரிக்கை !

அஞ்சமாட்டோம் , அஞ்சமாட்டோம் ,
ஒருக்காலும் அஞ்சமாட்டோம் ,
அத்வானி வகையறாக்கள்
அட்டூழியம் தொடர்ந்தாலும்
அஞ்சமாட்டோம் , அஞ்சமாட்டோம் ,

பாவிகளே பாவிகளே
பாபர் மஸ்ஜித் ஆவனங்களை
பறிகொடுத்த பாவிகளே
பாவிகளே பாவிகளே
பறிகொடுத்த பாவிகளே

நீதித்துறையே ! நீதித்துறையே !
நியாயம்தானா இது நியாயம்தானா
தண்டனைகொடு தண்டனைகொடு
நீதித்துறையை மதிக்காத
தீவிரவாதிகளுக்கு தண்டனைகொடு

பத்திரிக்கை அறிக்கை மாதிரி:

ஆசிரியர் அவர்கள்;

பாபர் மசூதி வழக்கு கோப்பு மாயம்
திட்டமிட்ட செயல்?
கவர்னர் மாளிகை முற்றுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்

உத்திரப்பிரதேசத்தில் பாபர் மசூதி நில வழக்கில் தொடர்புடைய 23 கோப்புகள் மாயமானதாக கூறுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது தொடர்பாக உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரனைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இப்படிப்பட்ட முக்கியமான கோப்புகள் காணாமல் போனால் இந்திய நாட்டில் எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் மாற்றலாம், மறைக்கலாம் என்ற நிலை உருவானால் சிறுபான்மை பிரிவு மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் வகையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ————– தலைமையில் …………… அன்று …………. இடத்தில் ………… மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெறும். இதன் பின்னனியில் உள்ள கறுப்பு ஆடுகளை கண்டுபிடித்து தன்டனை வழங்கிட வேண்டும்.
லிபரான் கமிஷன் தமது அறிக்கையை தாக்கல் செய்திருந்த நேரத்தில்; இது போன்ற திருட்டுச்செயல் சிறுபான்மை மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளது. இதற்கு உடந்தையாக செயல்பட்டவர்களை கண்டறிந்து கடும் தண்டனை வழங்காவிட்டால் நாடு முழுவதும் கடுமையான போராட்டம் தொடரும்.
இச்செய்தியை தங்கள் நாளிதழில் செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,

பெயர்,
(பொறுப்பு)