பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்து கடலுர் ல் ஆர்ப்பாட்டம்

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்துஉத்திரப்பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித் நிலவழக்கில் தொடர்புடைய 23 கோப்புகள் மாயமானதாக கூறுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது தொடர்பாக உத்திரப்பிரதேச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இப்படிப்பட்ட முக்கியமான கோப்புகள் காணாமல் போனால் இந்திய நாட்டில் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், மறைக்கலாம் என்ற நிலை உருவானால் சிறுபான்மை பிரிவு மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் வகையில்….

கடந்த சனிக்கிழமை 25/07/2009 கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாபரி மசூதி ஆவணங்களை திருடிய கயவர்களை கண்டித்தும் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்தும் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டதின் அனைத்து பகுதிகளிருந்தும் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட திரளாளோணர் கலந்து கொண்டணர். அல்ஹம்துல்லில்லாஹ்…..