பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்து விழுப்புரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

dsc_1775dsc_1784-1dsc_1773-1dsc_1780dsc_1780இந்திய வரலாற்றில் 50 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத ஒரே வழக்கு பாபர் மஸ்ஜித் வழக்கு தான். பாபர் பள்ளியில் நள்ளிரவில் பூட்டிய பூட்டை உடைத்து உள்ளே சிலைகளை வைத்த பல நாட்களாக சதிதிட்டம் தீட்டி அதை இடித்த நயவஞ்சகர்கள் யார் என்பது நன்கு தெரிந்தும் வழக்கு விசாரனையை தாமதப்படுத்தியதின் காரணமாக இன்று அந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் திருடு போய் உள்ளது.

நீதி மன்றத்திலேயே திருடிய திருடன்களை உடனே கைது செய்யக் கோரியும், திருட்டுப்போன ஆவணங்களை உடனடியாக மீட்டு தர கோரியும், திருடுபோகும் அளவிற்கு கவணமற்று பனிபுரிந்த கயவர்களை டிஸ்மிஸ் செய்ய வலியுருத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் தபால் நிலையம் முன்பு விழுப்புரம் TNTJ சார்பாக நடைபெற்றது.

ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.