பாபநாசம் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

26022010(026)26022010(028)26022010(013)26022010(021)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளையில் 26.02.10 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ:அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், மாவட்ட பொருளாளர் சகோ:Z.முஹம்மது நுஃமான் அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட து. செயலாளர் குலாம் அவர்கள் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் A.முஹம்மது ராபிக், K.T.M.நூருல் பஷீர், K.முஹம்மது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட து.தலைவர் B.இம்தியாஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் M.F.இம்தியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.