பாஜக இனவெறி பிடித்த கேகேகே (அமெரிக்காவின் இனவேறி இயக்கம்) போன்றது – ஜஸ்வந்த் சிங்க் பேட்டி

tntj.net பிரத்யேக செய்தி:

பாஜக இனவெறி பிடித்த கேகேகே போன்றது - ஜஸ்வந்த் சிங்க் பேட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் முன்னால் மத்திய அமைச்சரும், பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஜஸ்வந்த் சிங்க், பாஜகாவை “இந்திய கு க்லேக்ஸ் க்ளான் – கேகேகே“ (Ku Klex Klan – KKK) என்று வர்ணித்துள்ளார்.

கு க்லேக்ஸ் க்ளான் அமைப்பு அமெரிக்காவின் இனவெறி பிடித்த அமைப்பாகும். இந்த அமைப்பு கறுப்பர்களுக்கு எதிராக பல இனவெறி ஆட்டங்களை நிகழ்த்தி இருக்கிறது.இந்த அமைப்பு அமேரிக்காவில் தடை செய்யப்பட அமைப்பாகும். மிஸ்ஸிஸ்ஸிப்பி மாகனாத்தில் 1964 நடந்த கறுப்பர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான இந்த காட்டுமிராண்டி கும்பலின் இனவெறி கொலை உலக அளவில் மிகவும் விமர்சிக்கப்பட்டதாகும். இந்த அமைப்பை கேகேகே என்று சுருக்கமாக அழைப்பர்.

பாஜகவை இந்த அமைப்புடன் ஒப்புமைப்படுத்தி பாஜகவில் 30 வருடம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் விமர்சித்திருப்பது அதன் உண்மை ரூபத்தை வெளிப்படுத்தி உள்ளது. பாஜகவின் இறங்கு முகம் ஆரம்பித்து விட்டது. பாசிச கொள்கை கொண்ட இயக்கம் பாதாலத்திற்கு சென்ற கொண்டிருகின்றது.

செய்தி: அல்மதராஸி
(இணையதள செய்திளாளர்)