பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைபடை தாக்குதல்:

upper-dir-mosque-suicide-blastஇஸ்லாமாபாத், ஜுன் 5 வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 40 பேர் பலியாயினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

வட மேற்கு பாகிஸ்தானிலுள்ள திர் என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், அங்கு ஏராளமானோர் தொழுகைக்கு வந்திருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் 40 பேர் உடல் சிதறி பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.