பஹ்ரைன் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி

இரத்ததானம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வளைகுடா பகுதிகளிளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இரத்தான முகாம்கள் மூலமும் மற்றும் மக்களின் அவசர தேவைகளுக்காவும் இரத்ததை தானமாக வழங்கியும் இறைவனது கிருபையால் உயிர்காத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த 25-8-2011 அன்று, சகோதரி ஒருவருக்கு பிரசவம் காரணமாக ரத்த போக்கு ஏற்பட்டதால், நள்ளிரவு ரத்தில் சல்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரமாக “B பாசிடிவ்” வகை ரத்தம் தேவைப்பட, தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன்  பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள்.

உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் நள்ளிரவு என்று கூட பாராமல், சல்மானியா மருத்துவமனையில் தனது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் மற்றும் ஆதரவு சகோதரர்களை அனுப்பி சகோதரியின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் (6 யூனிட்) வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!

நள்ளிரவு என்றும் பாராமல் அவசர ரத்ததானம் செய்த நம் சகோதரர்களை பாராட்டி, சல்மானியா மருத்துவமனை நமது ஜமாத்திற்கு கடிதம் ஒன்றையும் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!