பஹ்ரைன் கிளைகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்

பஹ்ரைன் கிளைகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்பஹ்ரைன் கிளைகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்பஹ்ரைன் கிளைகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்பஹ்ரைன் கிளைகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்பஹ்ரைன் கிளைகளில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்குதைபிய்யா, முஹர்ரக், ரிஃபா என்ற கிளைகளுடன் செயல்பட்டு வரும் பஹ்ரைன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வின் பெரும் கிருபையால் ஸல்லாக் என்ற புதிய கிளை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புனித ரமளான் மாதத்தில் புதிதாக திறக்கப்பட்ட TNTJ மர்கஸில் ரமளான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் 50 முதல் 60 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இஃப்தாருக்குப்பின் மாநில மேலான்மைக் குழு உறுப்பினர் சகோ எம்.எஸ். சுலைமான் அவர்களின் சிறப்பு தொடர் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.‘பாவங்களும் தண்டனைகளும்’ மற்றும் ”சொர்க்கமும் நரகமும்’ அகிய தலைப்புகளில் தொடர் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வியாழன் இரவுகளில் சிறப்பு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 60 முதல் 80 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கின்றனர். இதில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் சகோ. ஆதம் ஃபாத்திமா ஆலிமா ‘சைத்தானின் ஊசலாட்டம்’ என்ற தலைப்பிலும், சகோ. எம்.எஸ். ”சுலைமான் சுயபரிசோதனை’ என்ற தலைப்பிலும் பேசினார்கள், பின்னர் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

கடந்த வெள்ளிக் கிழமை (4-09-2009) முஹர்ரக் கிளை உறுப்பினர் சந்திப்பும் நடைபெற்றது. அதில் ”நாம் செய்ய வேண்டியது என்ன’ என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சிகளை பஹ்ரைன் TNTJ அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது. அல் ஹம்துலில்லாஹ்.