பஹ்ரைனில் பெருநாள் தின நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த நோன்புப் பெருநாள் அன்று, பஹ்ரைன் அராத்தில் உள்ள பாஸ்மா கேம்பில் இந்தியாவிலிருந்து வந்த சில மாதங்களே ஆன தமிழகத்தச் சார்ந்த நமது சகோதரர்கள் தாங்கள் அடையும் இன்னல்களை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என்றிருந்த நிலையில், நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் தொடர்பு கிடைத்ததும், நாமது நிர்வாகிகள் அவர்களைச் சந்திதிது நலம் விசாரித்து, சில மார்கக விசயங்களையும் எடுத்துக் கூறினர்.

இந்த சந்திப்பில் ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து இங்கு வேலைக்கு வந்ததையும், வருடத்தில் ஒரு நாள் கூட விடுப்பு இல்லாமல் அவர்கள்இல்லை, குறைந்த சம்பளம், சுகாதாரமற்ற வசிப்பிடம், ஐநூறு நபர்களுக்கு வெறும் ஆறு கழிப்பிடங்களே உள்ளது, தரமற்ற உண்வு தரப்படுவது போன்ற தங்கள் படும் இன்னல்களை பகிர்ந்து கொண்டனர்.தங்கள் இங்கு வருவதற்கு பட்ட கடன் தீரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதையனைத்தையும் சகித்துக் கொண்டு வேலை செய்துவருகின்றனர்.இன்னும் ஒரு சகோதரர் இந்தியாவில் இருந்த போது தினம் ஐநூறு ரூபாய் சம்பாதித்ததையும் அனால் தற்போது இங்கு வெறும் ஆறாயிரம் மாதம் முழுவதும் சம்பாதிப்பதையும் மிகுந்த வேதணையுடன் கூறினார். இதுபோன்று இவர்கள் இன்னல்களுக்கு அளாவதற்கு நம்மவர்களே சிறு கமிஷங்களுக்கு ஆசைப்பட்டு இந்த பாதகச் செயல்களைச் செய்கின்றனர்.

நமது ஜமாஅத்தின் பத்திரிக்கைகளான உணர்வு, ஏகத்துவம், தீன் குலப்பெண்மனி, மற்றும் பாயான் சி.டி.க்களை பார்க்க படிக்க வேண்டும் என்ற அவர்களின் தேற்றத்தை அறிந்த நமது நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தனர். இந்த நிலையிலும் அவர்களின் சமுதாய சிந்தனைகள் நமது நிர்வாகிகளின் மனம் நெகிழச் செய்தது.