தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த 27-3-2010 அன்று சிறப்பு தஃவா நிகழச்சி நடைபெற்றது.
காலை 10 மணிக்கு 53 நபர்களுடன் இரண்டு வேன்களில் செல்லாக் என்ற பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத் தோட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பகல் நேரத்தில் நடத்தப்பட்டது.
அஷர் தொழுகைக்குப் பின் தாஃவா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது.
வந்தவர்களில் ஆண்களிடையே அல் ஜாபிர் அணி மற்றும் இப்ன் சீனா அணி என
இரண்டு அணிகளாகவும் பெண்களில் இப்ன் ஹய்யான் என்று ஓர் அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டு
இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் முதலிடத்தை அல் ஜாபிர் அணியும் இரண்டாம் இடத்தை இப்ன் சீனா அணியும் பிடித்தனர்.
முதல் பரிசாக 5 திருமறைக் குர்ஆன் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசாக சிறந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது.ஆறுதல் பரிசாக குறுந்தகடுகள் வழங்கப்பட்டது.
பின்னர் பஹ்ரைன் மண்டல மர்கசில் தாயீ பயிற்சி பெற்றுவரும் இலங்கையை சார்ந்த மாணவர்
முஹம்மத் நில்சாத் பெற்றோரைப் பேணல் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் சிற்றுரை நிகழ்த்தினார்.
கடைசியாக மண்டலத் தலைவர் சகோதரர் முனீப் “இன்றைய மகிழ்ச்சி மறுமையில் கிடைக்க…”
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்லாஹுவின் கிருபையால் நிகழ்சியை பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் நிகழ்ச்சியை நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர்.