பஹ்ரைனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

bh4bh2bhbh4பஹ்ரைனில் தியாகத் திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக கடந்த 29-11-2009 அன்று ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாயகத்தில் இருந்து வருகை தந்த சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
175 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் 30 பிற மத நன்பர்களும் கலந்து கொண்டனர்.

ஒதுக்கப்பட்ட 3 மணி நேர நிகழ்ச்சியில் இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர், குறிப்பாக திருடியவனுக்கு திருந்த வாய்ப்பு கொடுக்காமல் ஏன் எடுத்த எடுப்பிலேயே கையை வெட்டச் சொல்கிறது? இஸ்லாம் ஏன் நடனம் ஆடுவதை அனுமதிப்பதில்லை? மற்றும் நபிகள் நாயகம் மிகவும் மனிதநேயத்துடன் நடந்துள்ளார்கள் முஸ்லிம்கள் அப்படி இல்லையே ஏன்? போன்ற புதிய கேள்விகள் கேட்கப்பட்டன.

சரியான விளக்கம் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் தந்தது, அவர்களுக்கு முழு திருப்தியாக அமைந்தது.

மேலும் இந்த மூன்று கேள்விகளுக்கு சிறந்த கேள்வியாக தேர்தெடுக்கப்பட்டு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பரிசாக வழங்கப்பட்டது.

ஏனைய கேள்வி கேட்ட அனைவருக்கும்  ‘அர்த்தமுள்ள இஸ்லாம்’ என்ற புத்தகம் வழங்கப்பட்டது. மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாற்று மத நன்பர்களுக்கு ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’குருந்தகடுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடத்துமாறு தாங்கள் கருத்துப் படிவத்தில் பதிவு செய்தனர். நிகழ்ச்சியை அல்லாஹ்வின் உதவியால் பஹ்ரைன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.