பள்ளிவாசல் இமாம்களுக்கான 15 நாள் பயிற்சி முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையின் கீழ் இயங்கும் மர்கஸ்கள், பள்ளிவாசல்கள் ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதன் காரணமாக தவ்ஹீத் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் நமது பள்ளிவாசல்களில் தொழவரக்கூடியவர்களாக மாறியுள்ளனர். சொற்ப நபர்கள் என்ற நிலைமாறி பெரும் ஜமாத்தாக வளரும் நிலையை நமது ஜமாத்திற்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

அல்ஹம்துலில்லாஹ்!

மர்கஸ்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு இமாம்கள் போதுமான அளவு இல்லாத காரணத்தால் பல இடங்களில் இமாம்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சிறுவர்களுக்கு மதரசா பாடம் நடத்துவதிலும் தொய்வு ஏற்படுகிறது.

சில இடங்களில் மத்ரசா பாடம் நடத்த இமாம்களே இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப நிலை கொள்கை சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளை மாற்றுக் கொள்கையிலிருக்கும் கூடாரங்களுக்கு அனுப்பும் இக்கட்டான சூழல் ஏற்படுகிறது.

இவைகளை சீரமைக்கும் நோக்கில் மர்கஸ்களுக்கு ஏற்படும் இமாம்களின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாகவும் தொழவைக்கவும் மத்ரசா பாடம் நடத்தவும் தகுதியுள்ள இமாம்களை அதிகளவில் உருவாக்கும் நோக்கில் 15 நாள் பயிற்சி வகுப்பை மாநில தலைமை நடத்த உள்ளது.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய டிசம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை முதல் டிசம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை வரை மாநில தலைமையில் இரண்டு வார காலங்கள் இப்பயிற்சி வகுப்பு நடை பெறவுள்ளது

இந்த பயிற்சி வகுப்பில்,

தொழவைக்கும் அளவிற்கு குர்ஆன் வசனங்கள் மனனம் செய்தல்,

சிறுவர்களுக்கு குர்ஆன் எளிதில் கற்று கொடுக்கும் பயிற்சி,

தொழுகை சட்டங்கள்,

இமாமத் செய்யும் போது கவனிக்க வேண்டிய நபிவழிச் சட்டங்கள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

உணவு தங்குமிடம் இலவசம்,

கிளை, மாவட்ட பரிந்துரையுடன் வரும் 24.11.17 வெள்ளிக்கிழமைக்குள் மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பி வைக்கவும்.

இதில் பயிற்சி பெற்றவர்கள் தலைமை வழியாக தேவையுள்ள பகுதிகளில் ஜமாஅத்தின் மர்கஸ்களில் இமாமாக பணியமர்த்தப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எந்தெந்த பகுதிகளில் எல்லாம் இமாம்கள் இல்லாமல் பற்றாக்குறையாக இருந்து சிரமம் ஏற்பட்ட நிலை இருக்கின்றதோ அந்தந்த பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் உங்களது கிளை பகுதிக்குட்பட்டவர்களை இந்த பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்தால் அவர்களைக் கொண்டு நாம் இமாம்களின் பற்றாக்குறையை ஓரளவாவது சரி செய்யலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்